Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 8 வட்டாரங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு சார்ந்த திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
பதவி உயர்வு வழங்காமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும், பதவி உயர்வு பட்டியல் தயாராக உள்ள போதிலும் பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே வேளாண்துறை அமைச்சர் இதில் நேரடி கவனம் செலுத்தி காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.