news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பி செலுத்திய கடனுக்கு வங்கி நோட்டீஸ், விவசாயிகள் முற்றுகை
tv

Also Watch

tv

Read this

திருப்பி செலுத்திய கடனுக்கு வங்கி நோட்டீஸ், விவசாயிகள் முற்றுகை

அரியலூர்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
farmers blockade

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், கட்டிய கடனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்திற்கு பூட்டு போட்டு, விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில், கடந்த 2022ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.25,000 வரை கடன் வழங்கப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், வாங்கிய கடனை முழுமையாக அடைத்து முறைப்படி ரசீது வைத்துள்ளனர்.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கடனுக்கு, வட்டியோடு அசலை செலுத்துமாறு வங்கி சார்பில் விவசாயிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் திரண்டு, வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது, உரிய பதிலளிக்கவில்லை. இதன்மூலம் ரூ.3 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டு, ஊழல் செய்து இருப்பதும் விவசாயிகளுக்கு தெரிய வந்தது. இதனால், தழுதாழைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு திரண்ட விவசாயிகள், வங்கியை பூட்டி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தந்தை ராமதாசிடம் ஆசி பெற்றார் மகன் அன்புமணி

7
23 mins agoshare
மகனை கண்ணீருடன் கட்டித் தழுவிய ராமதாஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau