Also Watch
Read this
By: Web Team

ஆழியார் வால்பாறை சாலை மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே, தடுப்புச் சுவரை உடைத்து சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியை பாலசுப்ரமணியம் ஓட்டிச் சென்றுள்ளார். வால்பாறையில் உள்ள கடையில் இறக்கிவிட்டு அதிகாலை 2 மணி அளவில் பொள்ளாச்சி நோக்கி மலைப்பாதையில் வரும்போது, மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வலது புறம் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி உடைத்துக் கொண்டு, சுமார் 200 அடி மலைப்பாதை வழியாக வந்து இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள சாலையின் குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது.
விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், அவ்வழியாக வந்த லாரியில் கயிறு கட்டி ஈச்சர் வாகனத்தை இழுத்து, போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால் மலைப்பாதையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த பாலசுப்ரமணியம், எவ்வித காயங்கள் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved