Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆவில் சித்து இவரது மகன் தங்கதுரை தற்போது இவருக்கு சொந்தமான இடத்தில் கொய்யா
மரங்கள் வளர்த்து விவசாயம் செய்து வருகின்றார்.
இவரது இடம் அருகே உள்ள உறவினர் இடத்தை பாலமேட்டை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் வாங்கி தற்போது தங்கதுரை விவசாய நிலத்திற்கு செல்லும் பொதுப் பாதையை அடைத்து விவசாயம் செய்ய விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தனது விவசாய நிலத்திற்கு செல்ல பாதை இல்லாமல் சிரமப்படுவதால் கொய்யா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் செடிகள் கருகி விவசாயம் பாதிப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாலமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை புகார்தாரரை அழைத்து போலீசார் விசாரிக்கவே இல்லை என குற்றம் சாட்டுகின்றார் தங்கதுரை,
அதே போல் ராஜாக்கள்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமராஜ் -ராதா தம்பதியினரிடம் பத்திரம் அடகு வைத்து ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பெற்றதாகவும், தற்போது வட்டி முதலுடன் ரூ.11 லட்சம் தரவேண்டும் என அதே பாலமேட்டை சங்கர் கணேஷ் மிரட்டல் விடுப்பதாகவும்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என 2 வருடமாக அலைக்கழிப்பதாக கூறி ராமராஜும் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
விபரீதம் அறிந்த பெண் போலீசார் தண்ணீர் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவர்களை தடுத்தனர். பொதுபாதையை ஆக்கிரமித்தும், 3 லட்சம் வாங்கிய பணத்திற்கு ரூ.11 லட்சம் தரவேண்டும் என மிரட்டியதால் விவசாயி காவல் நிலையத்திற்கே வந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தற்போது மதுரை பாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.