news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒரு வழிப்பாதையில் தவறான போக்குவரத்தால் தொடர் விபத்து, வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஒரு வழிப்பாதையில் தவறான போக்குவரத்தால் தொடர் விபத்து, வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

வானகரம், திருவள்ளூர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vanagaram

வானகரம் சுங்கச்சாவடியில், போரூரில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில், தவறான திசையில் வருவதால் தொடர் விபத்து நிகழ்வதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், போரூர், அய்யப்பன்தாங்கலில் இருந்து வரும் வாகனங்கள், வானகரம் சுங்கச்சாவடி வழியாக தாம்பரம் செல்ல வேண்டும் என்றால் மதுரவாயல் - தாம்பரம் புறவழி சாலையில் சென்று, மதுரவாயல் மேம்பாலம் மீது ஏறி, மீண்டும் போரூர் நோக்கி வானகரம் சுங்கச்சாவடியை கடக்க வேண்டும்.

ஆனால், இதற்கு அதிக நேரம் மற்றும் எரிபொருள் செலவாகும் என்பதால், பெரும்பாலான வாகனங்கள் சுங்கச்சாவடி அருகே தவறான திசையில், யு-டேர்ன் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி இங்கு விபத்து ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில், போரூரில் இருந்து மதுரவாயல் செல்ல போக்குவரத்து விதிகளை பின்பற்றி காரில் செல்லும் ஒரு வாகனத்தை தவறான திசையில் ஒரு வழிப்பதையில் வந்த இருசக்கர வாகனம் மோதியது.


இது போக்குவரத்து விதிகளை பின்பற்றுபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் இதனை கண்காணிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான பரிசுத்தொகை உயர்வு

0
8 mins agoshare
விம்பிள்டன் டென்னிஸ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved