news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோடிகளில் வாங்கிய வீடு ஜீரோ ஆன கதை
tv

Also Watch

கோடிகளில் வாங்கிய வீடு ஜீரோ ஆன கதை

கோவில் நிலத்தில் ஆடம்பர குடியிருப்பு

99

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, கொரட்டூர் பகுதியில், கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, வீடுகளை விற்று 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றி விட்டதாக, அலையன்ஸ் அர்பன்ரைஸ் (Alliance Urbanrise) என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக, டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் புகாரளித்துள்ளனர். கோடிகளை கொட்டி வாங்கிய வீடுகளின் மதிப்பு ஜீரோ ஆனதன் அவலத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு
கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிய அலையன்ஸ் அர்பன்ரைஸ் கட்டுமான நிறுவனத்தின் அலையன்ஸ் அர்சிட் ஸ்பிரிங்ஸ் ப்ராஜெக்ட்டின் அடுக்குமாடி குடியிருப்புகள் தான், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த கொரட்டூர் பகுதியில் லேக் வியூவ் பாயிண்டில் சுமார் 16 ஏக்கரில் 8 பிளாக்குகள் என 18 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்திருக்கிறது அலையன்ஸ் அர்பன்ரைஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனம். இந்த வளாகத்தில் 2 ஆயிரத்து 36 வீடுகள் உள்ள நிலையில், ஒவ்வொன்றும் 650 சதுர அடி முதல் 2 ஆயிரத்து 700 சதுர அடி என பல்வேறு அளவுகளில் கட்டப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வொன்றும் சுமார் 50 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் அங்கு வீடு வாங்கிய குடியிருப்புவாசிகள்.

உள்ளே - வெளியே கதை
இந்த நிலையில், அந்த குடியிருப்புகள் அமைந்துள்ள 16 ஏக்கரில் 95 செண்ட் நிலம், அதாவது கிட்டதட்ட ஒரு ஏக்கர் நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் என தெரியவந்ததை அடுத்து, அந்த குடியிருப்புக்கான பட்டா ரத்து செய்யப்படுவதும், பின்னர் மீண்டும் வழங்குவதும் என உள்ளே - வெளியே கதையாக இருந்து வந்துள்ளது.


பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை
அலையன்ஸ் ஆர்சிட் ஸ்பிரிங்ஸ் குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தில், 95 செண்ட் நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்று நீதிமன்ற தீர்ப்பு 2025ல் வெளியானதை அடுத்து, அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பு ஜீரோவாக மாற்றப்பட்டதாகவும், இதனால் வீடுகளை பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள்.

டிஜிபியிடம் புகார்
வங்கி கடன் வாங்கி வீடுகளை வாங்கிய நிலையில், வீட்டின் மதிப்பு ஜீரோ ஆனதால், வாங்கிய கடன் தொகைக்கு சொத்து உத்தரவாதம் கேட்டு வங்கிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குடியிருப்புவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். கோடிகளை கொட்டி வீடுகளை வாங்கிய நிலையில், அதன் மதிப்பு பூஜ்ஜியம் ஆனதால் விழி பிதுங்கியுள்ள பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள், அலையன்ஸ் அர்பன்ரைஸ் கட்டுமான நிறுவனம் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றி விட்டதாக டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

அரசுத்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை
அலையன்ஸ் ஆர்சிட் ஸ்பிரிங்ஸ் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தங்களிடம் ஏமாற்றிய நிறுவனம் தான், தற்போது அலையன்ஸ் அர்பன்ரைஸ் என்று பெயரை மாற்றி செயல்படுவதாகவும், பெரம்பூர், மாதவரம், கேளம்பாக்கம் போன்ற இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர். அலையன்ஸ் அர்பன்ரைஸ் நிறுவனத்தின் மோசடிக்கு துணை போன சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளின் கோரிக்கை மட்டுமல்ல, அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Related Link
20 வயது இளைஞருடன் இல்லீகல்

20 வயது இளைஞருடன் இல்லீகல்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved