Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் காட்பாடியில், இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர்களை பதவி ஏற்க விடாமல் தடுப்பதாக கூறி, திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் வீட்டை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
குடியாத்தம் அருகே மீனூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வெங்கடேச பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சுதா, மீனா, ராஜலட்சுமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க விடாமல் நந்தகுமார் எம்.எல்.ஏ. தடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனை கண்டித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் மீனூர் கிராமத்தினர், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved