news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு பேருந்து ஓட்டுநர் தரக்குறைவாக பேசி தாக்க முயன்றதாக புகார்
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்து ஓட்டுநர் தரக்குறைவாக பேசி தாக்க முயன்றதாக புகார்

திண்டுக்கல்

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திண்டுக்கல் பயணி பிரச்சனை

தரக்குறைவாக பேசி தாக்க முயன்றதாக புகார் :

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியிலிருந்து அரசு பேருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. மங்களாபுரம் பேருந்து நிறுத்தத்தில் விவசாயி சக்திவேல் என்பவர் தன் குடும்பத்தினர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட எட்டு பேர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அரசு பேருந்து, நூறு அடிக்கு முன்னால் தள்ளி சென்று நின்றது. 100 அடி தள்ளி நின்ற பேருந்தில் ஏறிய சக்திவேல் மற்றும் அவர் குடும்பத்தினரை, அரசு
பேருந்து ஓட்டுனர் மணிவண்ணன் ஓடி வந்து ஏற வேண்டியதுதானே என்று கேட்டுள்ளார்.

அதற்கு பயணி சக்திவேல் நாங்கள் பெண்களுடன் எட்டு பேர் இருக்கிறோம் எப்படி ஓடி வந்து ஏற முடியும் என்று கேட்டதற்கு, ஓட்டுநர் தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டி பெரும்பாறை என்ற பகுதிக்கு வந்தவுடன் பேருந்தை நிறுத்திவிட்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

எனவே மற்ற பயணிகளும் ஓட்டுநரை கண்டித்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் போக்குவரத்து துறையிடம் புகார் அளிக்க முயன்றனர். அப்போதுதான் அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே ஓட்டுனர் மணிவண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக்திவேல் புகார் அளித்துள்ளார்.விவசாயி மற்றும் விவசாய குடும்பத்தினரை சேர்ந்த பயணிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி பெண்கள் என்றும் பாராமல் ஒருமையில் பேசிய நடத்துனர் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இது தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் குடிபோதையல் உள்ளார்களா என ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சி

எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1
10 hrs 19 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved