Also Watch
Read this
By: Web Team

தார்ச் சாலை அமைத்ததற்கான ஒப்பந்தப்பணி பில்லை கிளியர் செய்ய, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் உள்பட மூவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். செயற் பொறியாளர் வீரசேகரன், உதவி செயற் பொறியாளர் நாகலிங்கம் ஆகியோர், அலுவலக உதவியாளர் அருண் என்பவர் மூலம் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், தார் ரோடு போடுவதற்கு பணி ஆணை பெற்று, அந்த பணியை முடித்து, அதற்குண்டான தொகையை வழங்குமாறு கேட்ட போது, ஊரக வளர்ச்சி முகமை பொறியியல் பிரிவு செயற்பொறியாளர் வீரசேகரன், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ஒப்பந்ததாரர், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை செயற் பொறியாளர் வீரசேகரன், நாகலிங்கம், அவரது உதவியாளர் அருண் ஆகியோரிடம் கொடுக்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved