Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாநகராட்சியின் 49 ஆவது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலையை சீரமைக்காததை கண்டித்து, குண்டும் குழியுமான சாலையில் அதிமுக கவுன்சிலர் லோகநாதன் அங்கப்பிரதட்சிணம் செய்தார்.
கே.கே.நகர், ஜீவா நகர், கோவில் மானியம் நகர், தொரப்பாடி பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரியும்,
கழிவுநீர் கால்வாய் அமைக்காததை கண்டித்தும் அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் மக்களும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved