Also Watch
Read this
By: Web Team

மதுரை மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில், தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாமல் எந்த வேலை எடுத்தாலும் கமிஷன் கேட்பதாக என கூறி திமுக மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர் கருப்பசாமி , தமது வார்டில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யவில்லை என குறை கூறினார்.
அப்போது, குறுக்கிட்டு பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் விஜயா, நீங்கள் கமிஷன் பெறுவதை நிறுத்துங்கள் என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.