Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, தனியார் நிறுவனம் புதிதாக அமைக்கும் காற்றாலைக்கு, இறக்கை உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களால், சாலைகள் மற்றும் குடிநீர் குழாய் சேதமடைவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொத்தப்பட்டியில் இருந்து மறவபட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள மலையடிவாரத்தில் புதிய காற்றாலை அமைக்கப்படுகிறது. இந்நிலையில், சாலை சேதம் குறித்து அந்நிறுவன பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.