சாலையோரத்தில் தலை சிதைந்த நிலையில் சடலமாக கிடந்த இளைஞர். அரசு மதுபானக் கடைக்கு வந்த நபர்கள் கொடுத்த க்ளூவை வைத்து விசாரணையில் இறங்கிய போலீஸ். 2 பேரை கஸ்டடியில் எடுத்து விசாரணை. விசாரணையில் வெளியான பகீர் தகவல். இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?சாலையோரத்தில் கிடந்த சடலம்அரசு மதுபானக் கடைக்கு சில நபர்கள் மதுக்குடிக்க போய்ருக்காங்க. அப்ப, சாலையோரத்துல தலை சிதைக்கப்பட்ட நிலையில அய்யனார்-ங்குற இளைஞரு உயிரிழந்து கிடந்துருக்காரு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலம் கிடந்த இடத்த பார்வையிட்டாங்க. அடுத்து கொலையாளிகள் எதுவும் தடயங்கள விட்டுட்டு போய்ருக்காங்களான்னும் பாத்துருக்காங்க. அப்ப சடலம் கிடந்த கொஞ்ச தூரத்துல சட்டை ஒன்னு எரிஞ்ச நிலையில கிடந்துருக்கு. உடனே அத கைப்பற்றுன போலீசார், மதுபானக் கடைக்கு வந்த இளைஞர்கள் கிட்ட இந்த சம்பவத்த பத்தி கேட்ருக்காங்க. அப்ப அய்யனாரும், இதே பகுதியைச் சேந்த தமிழ்செல்வன்-ங்குற இளைஞரும் சண்டை போட்டுட்டே இருந்தாங்க, அவங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி நாங்க அனுப்பி விட்டோம், எங்களுக்கு அவன் மேல தான் சந்தேகம் இருக்குதுன்னு சொல்லிருக்காங்க. அந்த நபர்கள் சொன்னத வச்சு போலீசார் தமிழ்செல்வனோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க. அப்ப சிக்னல் அதே பகுதியில காட்டிருக்கு. இதனால சிக்னல் காட்டுன இடத்துக்கு போன போலீஸ் வீட்ல பதுங்கியிருந்த தமிழ்ச்செல்வன கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. மது போதைக்கு அடிமையான இளைஞர் அய்யனார்விழுப்புரத்துல உள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவருக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்குதுன்னு கூறப்படுது. அய்யனார் கூலி வேலை செஞ்சுட்டு இருந்தாரு. கல்யாணமான கொஞ்ச நாட்கள் மட்டும் குடும்பத்தோட நல்லபடியா இருந்த அவர், வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையாகிட்டாரு. அதுமட்டும் இல்லாம வேலைக்கு போய்ட்டு ஃபுல் போதையில வீட்டுக்கு திரும்பி வந்ததும் மனைவிய போட்டு அடிச்சும் டார்ச்சர் பண்ணிட்டு இருந்துருக்காரு. இதனால கணவன் மனைவிக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு.ஒன்றாக அமர்ந்து மது குடித்த மூன்று பேர்இவரும் அதே பகுதிய சேந்த தமிழ்செல்வனும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ். ரெண்டு பேரும் டெய்லி அதே பகுதியில உள்ள மதுபானக் கடைக்கு போய்ட்டு மதுக்குடிக்குறத வழக்கமா வச்சுருந்துருக்காங்க. அப்ப ரெண்டு பேருக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கு. மதுபோதையில அடிக்கடி ரெண்டு பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுட்டும் இருந்துருக்காங்க. சம்பவத்தனைக்கு அய்யனார் பக்கத்துல உள்ள அரசு மதுபானக் கடைக்கு போய் மதுக்குடிச்சுருக்காரு. அப்ப தமிழ்செல்வனும், பள்ளி சிறுவன் ஒருத்தனும் அங்க வந்து அவரு கூட உட்காந்து மதுக்குடிச்சுருக்காங்க. அப்ப போதையில ரெண்டு பேருக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. அய்யனாரும், தமிழ்செல்வனும் மாறி மாறி தகாத வார்த்தையால திட்டிக்கிட்டு பயங்கரமா சண்டை போட்ருக்காங்க. இதபாத்த அங்கருந்த நபர்கள் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வச்சுருக்காங்க.தமிழ்செல்வனை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்அப்ப அய்யனார் ஃபுல் போதையில் ரோட்ல நடந்து போய்ருக்காரு. அந்த நேரத்துல அவருக்கு ரொம்ப உடம்பு முடியாததால அங்கையே தள்ளாடி விழுந்துட்டாரு. இத தெரிஞ்சு அங்க போன தமிழ்ச்செல்வனும், அந்த பள்ளி மாணவரும் கீழ கிடந்த கல்ல எடுத்து அய்யனார தலையிலையே பல முறை அடிச்சு கொடூரமா தாக்கிருக்காங்க. இதுலை நிலைக்குலைந்த அய்யனார் சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு. அடுத்து அய்யனாரோட மேலாடைய கழட்டுன நபர்கள் பக்கத்துல உள்ள ஒரு இடத்துல வச்சு சட்டைய தீ வச்சு கொழுத்திட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் தமிழ்ச்செல்வன அரெஸ்ட் பண்ணிட்டாங்க. பள்ளிச் சிறுவன மேல வழக்கு மட்டும் பதியப்பட்டுள்ளதா கூறப்படுது. மதுபோதையில கூலி தொழிலாளி ஒருத்தரு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில பரபரப்ப ஏற்படுத்திருக்கு. Related Link கள்ளக் காதலால் நடந்த கொடூர சம்பவம்