news-tamil-logo

3/15/2026, 11:52:14 AM

news-tamil-logo
more
Home districtnews சேலம் மீட்டிங்கில் KASக்கு அவமரியாதை
tv

Also Watch

tv

Read this

சேலம் மீட்டிங்கில் KASக்கு அவமரியாதை

போஸ்டர் போர்க்களம் - அதிர்ச்சி ஆடியோ

Posted on: Feb 14, 2026 06:49 AM

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலத்தில், விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டிய த.வெ.க. நிர்வாகியை, சொந்த கட்சி நிர்வாகியே தாக்கி மருத்துவமனையில் அட்மிட் ஆக வைத்த சம்பவம் அரங்கேறியது. கொங்கு மண்டலமான சேலத்தில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையன் புறக்கணிக்கப்பட்டாரா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக்
செங்கோட்டையன் த.வெ.க.வில் ஐக்கியமாகும் போது, படை பரிவாரத்துடன் வரவேற்பு கொடுத்தது யாருக்கும் மறந்திருக்காது. ஆனால், அதே செங்கோட்டையன் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியதற்காக கட்சிக்குள்ளேயே மல்லுக்கட்டு நிகழ்ந்த சம்பவம் தான் தற்போது கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

போஸ்டரால் மல்லுக்கட்டு
சேலத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விஜய்யை வரவேற்று சேலம் விமான நிலையம் தொடங்கி சீலநாயக்கன்பட்டி வரை பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், விஜய்யை வரவேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகைப்படத்துடன், அஸ்தம்பட்டியை சேர்ந்த த.வெ.க. செயற்குழு உறுப்பினர் பாரதி கண்ணன் என்பவர் போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகைப்படத்துடன், முன்னாள் எம்.எல்.ஏ., SE வெங்கடாஜலம் படமும் இருப்பது போல போஸ்டர் ஒட்டியிருக்கிறார் த.வெ.க. செயற்குழு உறுப்பினர் பாரதி கண்ணன்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மத்திய மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பாலு என்பவர், யாரை கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு பாரதி கண்ணனும் பேச, ஆட்களுடன் வந்த பாலு பாரதி கண்ணனை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

சொந்த கட்சிக்குள்ளேயே பிரச்சனை
சேலத்தில் வைக்கப்பட்டிருந்த மற்ற பேனர்களிலும் கூட செங்கோட்டையன் புகைப்படம் இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொங்கு மண்டலத்தில் முக்கிய முகமாக செங்கோட்டையன் அறியப்படும் நிலையில், கடந்த முறை ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி காட்டியிருந்தார். அதிமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு வந்த போது, செங்கோட்டையனை வரவேற்று விஜய்யே வீடியோ போட்டதும் கவனிக்க வைத்தது. அரசியல் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் த.வெ.க.வில் சீனியர்கள் யாரும் இல்லாமல் இருந்தது என்ற நிலையில், செங்கோட்டையன் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதோடு, செங்கோட்டையன் வருகைக்கு பின்னர் தான் அதிமுகவை சேர்ந்த சில நிர்வாகிகள் த.வெ.க. பக்கம் வர காரணமாக இருந்தது. அப்படி இருக்கையில் செங்கோட்டையன் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியதற்காக சொந்த கட்சிக்குள்ளேயே பிரச்சனை வெடித்திருப்பது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வாகனத்தில் மேலே ஏற அனுமதிக்கப்படவில்லை
ஏற்கனவே, செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக அரசல், புரசலாக தகவல் கசிந்து வரும் நிலையில், அதனை உறுதிபடுத்தும் வகையில் செங்கோட்டையன் படத்துடன் போஸ்டர் ஒட்டிய நிர்வாகி தாக்கப்பட்டு இருப்பதும் பார்க்கப்படுகிறது. வழக்கமாக விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும் போது முக்கிய மாநில நிர்வாகிகள் உரையாற்றுவது வழக்கம் என்ற நிலையில், சேலத்தில் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் மட்டுமே உரையாற்றினார். வேறு எந்த மாநில நிர்வாகிகளும் பேச அனுமதிக்காத நிலையில், கொங்கு மண்டலத்தில் முக்கிய முகமாக பார்க்கப்படும் செங்கோட்டையன் கூட விஜய்யின் வாகனத்தில் மேலே ஏற அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யை, சால்வை அணிவித்து வரவேற்றதோடு சரி, அதற்கு பிறகெல்லாம் ஏதோ வேண்டா வெறுப்பாகவே நின்றிருந்தார் செங்கோட்டையன்.

போஸ்டர்கள் ஒட்டக் கூடாது
இதுகுறித்து விசாரித்த போது, செங்கோட்டையன் புகைப்படத்துடன் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது. தவெகவில் புதிதாக சேர்ந்த வெங்கடாச்சலம் தான் அடுத்த மாவட்ட செயலாளர் என்று கட்சிக்காரர்களிடம் கூறிவருவதால் கட்சியினர் அவர் மீது ஆத்திரத்தில் இருப்பதாகவும் இந்த நிலையில் செங்கோட்டையனுடன் போஸ்டரில் வெங்கடாச்சலம் படமும் இடம்பெற்றதுதான் இத்தனைக்கும் காரணம் என்கின்றனர். சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஐந்து மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும், தமிழன் பார்த்திபன் தான் ஒட்டு மொத்த சேலத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பார்த்திபன் சேலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருப்பதால் செங்கோட்டையனுக்கு பொறுப்பு வழங்கும் போது கூட சேலம் மாவட்டத்தை விட்டு விட்டு, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு தான் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

செங்கோட்டையன் புறக்கணிக்கப்படுகிறாரா?
செங்கோட்டையன் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்த நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து புஸ்ஸி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது நைசாக எதுவுமே சொல்லாமல் கழன்று கொண்டார். த.வெ.க.வுக்கு வந்த செங்கோட்டையனை சொத்து, பத்து என அந்த கட்சியினர் கொண்டாடிய நிலையில், தற்போது அதற்கு முரணாக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் செங்கோட்டையனுக்கு எதிராக உள்ளடி அரசியல் செய்வது செங்கோட்டையன் புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.

Related Link
விடிந்ததும் வந்து விழுந்த ரூ.5 ஆயிரம்

விடிந்ததும் வந்து விழுந்த ரூ.5 ஆயிரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

1
13 mins agoshare
Election datebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved