news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கைதிகள் தயாரித்த தீபாவளி பலகாரங்கள், விற்பனை மும்முரம்
tv

Also Watch

tv

Read this

கைதிகள் தயாரித்த தீபாவளி பலகாரங்கள், விற்பனை மும்முரம்

மதுரை

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai Central Jail sells sweet

தீபாவளியை முன்னிட்டு, மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
மதுரை மத்திய சிறைச்சாலை வாயிலில், ஃப்ரீடம் பஜார் என்ற கடை கடந்த சில வருடங்களாக பொது மக்கள் மற்றும் சிறையில் இருக்கக்கூடிய சிறைவாசிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு வசதியாக உணவு, உடை, இனிப்பு, கார வகைகள் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், மதுரை சிறையில் இருக்கக்கூடிய சுமார் 2000 சிறைவாசிகள் மற்றும் விசாரணை கைதிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது மறுவாழ்வு பணிகளை, மேம்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு சிறைத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, வெற்றியும் பெற்றுள்ளது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு மதுரை மத்திய சிறைவாசிகள் லட்டு, ஜாங்கிரி, அல்வா, பாதுஷா, மைசூர் பாகு போன்ற இனிப்பு வகைகளும், மிச்சர், காராச்சேவு, காராபூந்தி உள்ளிட்ட கார வகைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைச் சிறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மதுரை மத்திய சிறைச்சாலையில் தயார் செய்யப்படக்கூடிய இனிப்பு வகைகள் மிகவும் சுவையானதாக இருப்பதால் மக்கள் தொடர்ந்து ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 20 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau