news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுகவா? தவெகவா? எதில் இணையலாம்....
tv

Also Watch

tv

Read this

திமுகவா? தவெகவா? எதில் இணையலாம்....

சேலம்

29

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
eps ops

சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தேனி மாவட்ட அதிமுகவினர் நேரில் சந்தித்தனர்.

இபிஎஸ் - ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முகாமிட்டுள்ளார். ஈரோட்டில் இரண்டு நாட்கள் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ள அவரை முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர்.

திமுகவில் இணையலாமா? தவெகவில் இணையலாமா?
இதனிடையே, தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவில் இணைந்தனர். மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மீது பரிதாபப்பட்டு அவருடன் இருந்ததாகவும் ஆனால் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டு சுயநலத்தால் அவர் திமுகவில் இணைந்ததை ஏற்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தேனி மற்றும் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்திய போது திமுகவில் இணையலாமா? தவெகவில் இணையலாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Link
ஓபிஎஸ்-க்கு நரம்பில்லாத நாக்கு

ஓபிஎஸ்-க்கு நரம்பில்லாத நாக்கு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 16 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved