news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓபிஎஸ்-க்கு நரம்பில்லாத நாக்கு
tv

Also Watch

ஓபிஎஸ்-க்கு நரம்பில்லாத நாக்கு

மதுரை

66

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu main

திருமங்கலத்தில் செல்வாக்காக இரட்டை இலை இருப்பதால் தான் திருமங்கலத்தில் நாளை கூட்டம் போடுகிறார்கள் பிள்ளை பிடிக்கும் வேலையை ஒரு வார காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சாக்கோடு திரிகிறார்கள் - நாளை ஓபிஎஸ் திமுகவில் இணையும் இணைப்பு விழாவை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக சாடினார். மக்கள் உங்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிந்ததால் தான் 22 கட்சியை கூட்டணியை சேர்க்கிறீர்கள். 22 கட்சி அல்ல 52 கட்சியை நீங்கள் சேர்த்தாலும் உங்களுக்கு தோல்வி என்பது உறுதி என தெரிவித்தார். திருமங்கலத்தை அடுத்துள்ள T.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோவிலில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பாக முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் தேர்தல் பணிகள் குறித்தும் தேர்தல் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

விசுவாசம் என்று சொல்லி வேஷம் போட்டவர்
இதனைத் தொடர்ந்து பேசிய ஆர்.பி. உதயகுமார், விசுவாசம் என்று சொல்லி வேஷம் போட்டவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை அவர்கள் முகாம் மாறி என்ன பதவிக்கு சென்றாலும் அது துரோகத்திற்கான பதவி தானே தவிர அது விசுவாசத்திற்கான அடையாளமாக இருக்காது விசுவாசம் விசுவாசம் என்று பேசியதெல்லாம் இன்று வெறும் வேஷம் என்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது என கூறினார். இரு பெரும் தெய்வங்களின் ஆன்மா இருக்கின்றனர் என்ற நம்பிக்கையில தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த ஆன்மா இல்லை என்றால் இந்நேரம் நம்மளை சின்னாபின்னமாக ஆக்கி இருப்பார்கள், அதிமுக என்கிற கட்சி இருக்கக் கூடாது என்பது தான் திமுக வின் கொள்கை. ஆனால் அண்ணா திமுகவினுடைய கொள்கை திமுக எனும் தீயசக்தி ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதிமுகவில் முதலமைச்சர் பதவியை அலங்கரித்து விட்டு, அனுபவித்துக் கொண்டு வெட்கமில்லாமல் திமுகவில் இணைந்து கொண்டு, திமுகவை முதலமைச்சராக போகிறேன் என்று சொல்லுகிற நரம்பில்லாத நாக்கு, இது கலியுகம் இந்த கலியுகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

ஒரு தடவ பிறக்கிறோம் ஒரு தடவ சாகப் போகிறோம்
புரட்சித் தலைவர் உருவாக்கிய கட்சி நிச்சயம் ஆட்சி கட்டிலில் அமரும், இதைவிட சோதனைகள் எல்லாம் அதிமுக சந்தித்து விட்டது நீங்களும் சந்தித்து விட்டீர்கள் என்ன கெட்டுப் போய்விட்டது ஒரு தடவ பிறக்கிறோம் ஒரு தடவ சாகப் போகிறோம். ஏற்றுக்கொள்கிற கொள்கைக்காக உயிரை விட்டால் அதுவே தன்மானம். அங்க ஓட இங்க ஓட அங்க போய் கொஞ்சம் தான் சாப்பிட முடியும் அதுக்காக எக்ஸ்ட்ராவாக சாப்பிட முடியும்? சாப்பிட்டது செரிக்க வேண்டும் அல்லவா ? சோறு விஷமாக மாறிவிடும் அல்லவா ?

எதற்காக இத்தனை கட்சிகளை ஓடி ஓடி சேர்க்க வேண்டும்?
இந்த தேர்தலில் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மக்களை காப்பாற்றுகின்ற தேர்தல். ஒவ்வொரு பூத்துகளிலும் நீங்கள் அதிகமான ஓட்டுகளை பெற்று தர வேண்டும். பதிவாகிற வாக்குகளில் 80 சதவீதம் இரட்டை இலை தான் இருக்க வேண்டும் இது ஒன்றுதான் கோரிக்கை. தற்போது நீங்கள் கிராமத்து பக்கம் போனீர்கள் என்றால் மக்கள் உங்களிடத்தில் கேட்பார்கள் உங்களை எதிர்த்து திமுகவில் 22 கட்சிகள் இருக்கிறதே என்று? எதற்காக 22 கட்சிகளை சேர்க்கிறார்கள் அவர்தான் பலமாக இருக்கிறாரே? எதற்காக இத்தனை கட்சிகளை ஓடி ஓடி சேர்க்க வேண்டும் அவருக்கு தோல்வி பயம் வந்ததனால் 22 கட்சிகளை சேர்த்து வைத்திருக்கிறார்.

22 கட்சி அல்ல 52 கட்சியை சேர்த்தாலும்...
மக்கள் உங்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிந்ததால் தான் 22 கட்சியை கூட்டணியை சேர்க்கிறீர்கள். 22 கட்சி அல்ல 52 கட்சியை நீங்கள் சேர்த்தாலும் உங்களுக்கு தோல்வி என்பது உறுதி. திருமங்கலம் தொகுதிக்கு விசுவாசத்துக்கு சவால் விடுகிற துரோகம் எல்லாம் திருமங்கலத்திற்கு தான் வருது. ஏற்கனவே ஒரு துரோகத்தை எதிர்த்து கொண்டிருக்கிறோம். நாளைக்கு ஒருத்தர் துரோகத்தின் அடையாளமாக திருமங்கலத்தில் நாளை கூட்டம் போடுகிறார். ஏன் திருமங்கலத்தில் கூட்டம் போடுகிறார்கள் தெரியுமா...? திருமங்கலத்தில் செல்வாக்காக இரட்டை இலை இருப்பதால் தான் திருமங்கலத்தில் நாளை கூட்டம் போடுகிறார்கள் பிள்ளை பிடிக்கும் வேலையை ஒரு வார காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சாக்கோடு திரிகிறார்கள் ஒருவரும் சிக்கவில்லை.

ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது
தேர்தல் வாக்குறுதிகளாக பத்தாயிரம் அறிவித்தவுடன் ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. வெளிய நாங்க தான் வருவோம் என்று சொல்கிறார்கள் ஆனால் உள்ளே நடுக்கம் மகளிர் உரிமைத் தொகை 2,000 மாற்றுத்திறனாளிகளுக்கு 2,000 என அறிவிக்கிறார். நீங்கள் ஒரு லட்சம் கூட வங்கி கணக்கில் போடுங்கள் இது உங்கள் தாத்தா விட்டு பணம் இல்ல மக்கள் வரிப்பணம் தானே அதனால் மக்களுக்கு எல்லா விவரமும் தெரியும், நீங்கள் வீட்டுக்கு போவது உறுதி எடப்பாடி யார் கோட்டைக்கு போவது உறுதி.

அந்த ஒற்றை சொல்லுக்காக தான் உழைக்கிறேன்
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் 10 ஆண்டுகள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இதுக்கு மேல் நான் எந்த பதவியையும் பார்க்க வேண்டியது இல்லை அந்த அளவிற்கு புரட்சித்தலைவி அம்மாவும் எடப்பாடியாரும் வழங்கியிருக்கிறார்கள். என்னுடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இருபெரும் தெய்வங்களை காப்பேன். எந்த கிராமங்களில் போனாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை உதயகுமார் போகிறான் என்கிறார்கள். அந்த ஒற்றை சொல்லுக்காக தான் உழைக்கிறேன். மாமியார் மருமகளுக்கிடையே பேச்சுவார்த்தை இருக்காது ஆனால் நம்மிடம் உரிமையாக மருமகளுக்கு கொடு என்று கேட்பார்கள் அப்படி 10 வருடம் பகையாக இருந்தவர்களை கூட மீண்டும் உறவுகளாக மலரச் செய்தது அதிமுக நாங்க பின்னர் பாகம் முகவர்களை பார்த்து நீங்க ரெடியா எனக்கேட்டு உரையை நிறைவு செய்தார்.

Related Link
தளபதி விஜய் வந்தால் இதையெல்லாம் செய்வோம்...

தளபதி விஜய் வந்தால் இதையெல்லாம் செய்வோம்...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய தலைமைச் செயலகம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved