Also Watch
Read this
By: Web Team

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணியளவில், அறிவாலயத்தில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவை சேர்ந்த திமுக எம்பிக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அதற்கான ஆயத்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு, ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் மற்றும் தேர்தலுக்கான நடவடிக்கைகள், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், பிரச்சார நடவடிக்கைகள், திமுகவின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்கள்; திமுக எம்.பி.க்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை | CM Stalin | DMK MPs Meeting