Also Watch
Read this
By: Web Team

போலீசார் முன்னிலையில், திமுக மற்றும் தவெகவினர் மோதிக் கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அதன் சுற்று வட்டார பகுதிகளில், தவெக தலைவர் விஜய் குறித்து, திமுக நிர்வாகிகள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு போலீசார், இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் கண் முன்னே திமுகவினர், தவெக நிர்வாகிகளை தாக்கி உள்ளனர்.

இந்நிலையில், தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவினரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.