Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் அணை பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிந்த யானைகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், அதனை தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகள், உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வருகின்றன.
இந்தநிலையில், ஆழியார் அணை பகுதியில் குட்டிகளுடன் யானை கூட்டம் சுற்றித்திரிந்த நிலையில், அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved