Also Watch
Read this
By: Manigandan Raja

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு :
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தனர். கடந்த மார்ச் 25 ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.