Also Watch
Read this
By: Manigandan Raja

மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் :
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதுடன், வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி அமைதியான மற்றும் சீரான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில்.
இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களும், மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும் சேர்த்து மொத்தம் நான்கு நாட்களுக்கு அரசு மதுபான கடைகள், பார்கள் மற்றும் தனியார் மதுபான விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், "மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட தனிப்பிரிவு காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது சுமார் 60 பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 3,000 மதுபான பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன்.
சரவணனை கைது செய்து, மேலூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அந்த மதுபானங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதற்கான விசாரணையை மேலூர் காவல்துறையினர்
தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.