Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் கடந்த 1 வார காலமாக கனமழை கொட்டி வரும் நிலையில் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டதால், கம்பி வேலிக்கு வெளியே நின்று அருவியின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
இதையும் படியுங்கள் : இந்து சமய அறநிலையத்துறை கோயிலை இடிக்க எதிர்ப்பு... நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக இடிக்க முயற்சி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved