news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வெள்ளப்பெருக்கு... பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

வெள்ளப்பெருக்கு... பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Flood

செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வழியாக செல்லும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவ்வாது மலைத்தொடரில் பரவலாக கனமழை பெய்ததின் காரணமாக, செண்பக தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை திறந்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதன் காரணமாக, ஆரணி பகுதி வழியாக வரும் கமண்டல நாக நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. வாழைபந்தல் பகுதியில் கமண்டல நாகநதி செய்யாற்றில், இந்த வெள்ளம் கலக்கிறது.
இதன் காரணமாக, செய்யாற்றில் பரவலாக வெள்ளம் கரை புரண்டு செல்கிறது.

இதனால் செய்யாற்றில் இருந்து துணைக் கால்வாய்கள் மூலமாக ஏரிகளுக்கு தண்ணீர்
திருப்பி விடப்பட்டுள்ளதால், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
2 hrs 36 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved