Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரில் நடைபெற்ற மத நல்லிணக்க கந்தூரி விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரீபுன் நவாஸ் கந்தூரி குழுவினர் சார்பில், ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த விழா, நடப்பாண்டு 8ஆவது ஆண்டாக தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சாதி, மத பேதமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு, சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது.