Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்த இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆய்வு செய்தார். நாளை 27ஆம் தேதி காலை நாமக்கலில் பிரச்சாரம் செய்யும் விஜய், மாலை கரூரில் தனது மக்கள் சந்திப்பு பயணம் மூலம் பிரச்சாரம் செய்கிறார்.
காவல்துறை அனுமதி அளித்ததை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் அப்பகுதியை ஆய்வு செய்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தொடர்ந்து விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.