Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்கொளத்தூர் பகுதியில் சாலைப் பணிக்காக முன்னறிவிப்பின்றி கல்லறைகள் அகற்றப்பட்டதால், அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆய கொளத்தூர் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே எண்ணூர்-மகாபலிபுரம் சாலை அமையவுள்ள நிலையில், சுடுகாட்டிற்கு மாற்று இடம் மற்றும் இழப்பீடு தருவதாக அறிவித்துவிட்டு திடீரென கல்லறைகளை இடித்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இடிந்த மகனின் கல்லறையை கண்டு தாய் ஒருவர் கதறி அழும் காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படியுங்கள் : ஓவேலியில் பொதுமக்களை அச்சுறுத்திய யானைக்கு முதல் மயக்க ஊசியை செலுத்திய வனத்துறையினர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved