Also Watch
Read this
By: Web Team

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கொல்லம்பாளையம் பகுதி கட்டபொம்மன் வீதியில் உள்ள தாழ்வான வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் புகுந்தது. குடியிருப்பு வாசிகள் பாத்திரங்களை கொண்டு மழைநீரை வாரியிறைத்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டது.