news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

ராமநாதபுரம்

39

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rmp 2

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 25 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


ஐந்து அம்ச கோரிக்கைகள்

தமிழக அரசு ஆணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

12 மாத சம்பளம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளருக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்.

பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளகளுக்கும் பி.எஃப், மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாள்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதிமுக மத்திய ஒன்றிய கழக செயலாளரிடம் மனு

கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவளித்து அதிமுகவினர் பங்கேற்றனர்.அப்போது கௌரவ விரிவுரையாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுக்களை முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமாரிடம் வழங்கினர்.

அடுத்த கட்ட போராட்டங்களை கையில் எடுப்போம்

கடந்த 4 நாட்களாக தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்களை கையில் எடுப்போம் என கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

Related Link
ஆட்சியில் பங்கு எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது

ஆட்சியில் பங்கு எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 18 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved