Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மண்வெட்டியின் கைப்பிடியால் அடித்து கொலை செய்த கணவர், கரூர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கரூர் கம்பளியம்பட்டியை சேர்ந்த நாகராஜ், தாராபுரத்தில் புதிதாக கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணியில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார்.
மனைவி ராஜகுமாரி மீது சந்தேகப்பட்டு நாகராஜ் அவரை அடித்து உதைத்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரை சமாதானம் செய்து அழைத்து வந்த நாகராஜ், மது அருந்திவிட்டு மீண்டும் சண்டையிட்டு மனைவியை கொலை செய்தார்.