Also Watch
Read this
By: Web Team

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலம்பெற்று வீடு திரும்பியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, தாம் விரைந்து நலம்பெற உறுதுணையாக இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும் தெரிவித்துள்ள அவர், மக்களுக்காக உழைப்பை வழங்கும் தனது கடமையை என்றும் தொடர உள்ளதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved