news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடுத்தவரின் மனைவியுடன் இல்லீகல்
tv

Also Watch

tv

Read this

அடுத்தவரின் மனைவியுடன் இல்லீகல்

ஓட்டேரி, நெல்லை

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தவருடன் தகராறு. திடீரென்று மறைத்து வைத்திருத்த அரிவாளை எடுத்து கொன்ற இருவர். சாலையில் உயிரிழந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். அடுத்தடுத்து விசாரணையில் வெளியான பகீர் தகவல். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நபர் யார்? அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?

* வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சுந்தர்
* சுந்தரின் உயிரை எடுத்த இருவர்
* காவல்நிலையத்தில் சரணடைந்த மணிகண்டன், இசக்கி


காலை 9 மணி, வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்துருக்காரு சுந்தர். அப்ப அவர வழிமறிச்ச ரெண்டு பேரு, சுந்தர் கிட்ட பயங்கரமா வாக்குவாதம் பண்ணிருக்காங்க. அடுத்து மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்த ரெண்டு பேரும் சுந்தர ஓட ஓட வெட்டிருக்காங்க. இதுல ரத்த வெள்ளத்துல சுருண்டு விழுந்த சுந்தர் சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு. இந்த சம்பவம் அந்த பகுதில காட்டுத் தீ போல பரவிருக்கு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணையில இறங்குனாங்க. சுற்றுவட்டார கிராம மக்கள் கிட்ட விசாரணை பண்ணிருக்காங்க. அதுல எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அடுத்து அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க போலீஸ். இதுக்கிடையில முன்னீர் பள்ளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன ரெண்டு பேரு, சார் சுந்தர நாங்க தான் வெட்டிக் கொலை செஞ்சோம்ன்னு சொல்லிருக்காங்க. உடனே அந்த ரெண்டு பேரையும் பிடிச்சு எதுக்காக இந்த கொலை பண்ணிங்க, ரெண்டு பேருக்கு இடையில என்ன பிரச்னைன்னு கேட்ருக்காங்க. அதுல தான் பல மர்மங்கள் வெளியில வந்துருக்கு.

* பத்திரம் எழுதி கொடுக்கும் வேலை செய்த சுந்தர்
* முத்துமாரி என்ற பெண்ணுடன் பழகி வந்த சுந்தர்
* மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவன் மணிகண்டன்


நெல்லை, இட்டேரி பகுதிய சேந்தவரு சுந்தர். இவரு அதே பகுதியில ஒரு அலுவலகத்த வச்சு பத்திரம் எழுதித் தர வேலைய செஞ்சுட்டு இருந்துருக்காரு. இந்த அலுவலகத்துல முத்து மாரிங்குற பெண் பணியில சேந்துருக்காங்க. முத்துமாரிக்கு கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்கன்னு கூறப்படுது. ஆரம்பத்துல கேசுவலா பேச ஆரம்பிச்ச சுந்தரும், முத்துமாரியும் ரொம்ப க்ளோஸா பழகிருக்காங்க. இந்த பழக்கமே அவங்களுக்குள்ள கள்ளக்காதலா மாறிருக்கு. வேலைக்கு போறதா சொல்லிட்டு வீட்ட விட்டு கிளம்புற முத்துமாரி, சுந்தர் கூட சேந்து ஊர் சுத்திட்டு இருந்துருக்காங்க. அதுமட்டும் இல்லாம கணவன் கிட்ட முகம் கொடுத்து பேசாத முத்துமாரி, அடிக்கடி சுந்தர் கூட ஃபோன்ல சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்ததா கூறப்படுது. இதபாத்த கணவன் மணிகண்டனுக்கு மனைவி மேல லைட்டா சந்தேகம் வந்துருக்கு. ஒரு நாள் முத்துமாரி வீட்ல ஃபோன வச்சுட்டு பக்கத்துல உள்ள கடைக்கு போய்ருக்காங்க. அப்ப அவங்க ஃபோன எடுத்த மணிகண்டன் வாட்ஸ் அப், இன்ஸ்ட்டான்னு எல்லாத்தையும் எடுத்து செக் பண்ணிருக்காரு. அப்ப முத்துமாரி, சுந்தர் கூட சாட் செய்திருந்த மெஸேஜ்கள பாத்து அதிர்ச்சியடைஞ்ச மணிகண்டன் தனது மனைவி கிட்ட சண்டை போட்ருக்காரு.

* மனைவி முத்துமாரியை அடித்து துன்புறுத்திய கணவன்
* சுந்தருடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த முத்துமாரி
* வீட்டை விட்டு வெளியேறி சுந்தருடன் சென்ற முத்துமாரி


எதுக்கு நீ சுந்தர் கிட்ட இப்படி பேசிப் பழகிட்டு இருக்க, இத்தன நாளா நல்லா தான இருந்த, திடீர்ன்னு உனக்கு என்ன ஆச்சு, நீ எனக்கு துரோகம் பண்ணிட்ட, நமக்கு கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க, ஆனா அவங்களோட எதிர்காலத்த பத்தி யோசிக்காம, நீ இந்த மாதிரி பண்ணிட்டு இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல, இனிமே சுந்தர் கூட பேசுறத நிறுத்திரு இல்லன்னா உன்ன உயிரோடையே விடமாட்டேன்னு மிரட்டிருக்கார். இத கேட்ட மனைவி பதிலுக்கு சண்டை போட ஆத்திரமடைஞ்ச கணவன், முத்துமாரிய போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. இதனால முத்துமாரி கணவன் கூட சண்டை போட்டுட்டு பசங்கள கூப்டுட்டு சுந்தர் வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப இந்த விஷயத்த கேள்விப்பட்ட சுந்தரோட மனைவி, கணவன் கூட சண்டை போட்டுட்டு தாய் வீட்டுக்கு கிளம்பிருக்காங்க. அதுக்கடுத்து சுந்தரும் முத்துமாரியும் ஓட்டேரி பகுதியில உள்ள ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து தனியா வசிச்சுட்டு இருந்தாங்க.

* சுந்தரை முடிக்க திட்டம் போட்ட மணிகண்டன், இசக்கி
* சுந்தரை சாய்த்த மணிகண்டன், இசக்கி
* மணிகண்டன், இசக்கி இருவரையும் கைது செய்த போலீசார்


இத தெரிஞ்சு நொந்து போன மணிகண்டன் தன்னோட தம்பி இசக்கி கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி புலம்பிருக்காரு. அடுத்து ரெண்டு பேரும் சேந்து சுந்தர கொலை பண்ண திட்டம் போட்ருக்காங்க. சம்பவத்தன்னைக்கு சுந்தர் அலுவலகத்துக்கு புறப்பட்டு வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்தாரு. அப்ப அவர வழிமறிச்ச மணிகண்டனும், இசக்கியும் வாக்குவாதம் பண்ணிருக்காங்க. என் மனைவிய தயவு செஞ்சு என் கூட அனுப்பி வச்சுருன்னு, உன்னால என் குடும்ப மானமே போய்ருச்சுன்னு சொல்லிருக்காரு. அதுக்கு சுந்தர் உன் மனைவி என் கூட தான் இருப்பா உன்னால என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கோன்னு திமிரா பேசிருக்காரு. இதனால கடும் கோபமான ரெண்டு பேரும் அரிவாள எடுத்து சுந்தர ஓட ஓட வெட்டிருக்காங்க. கை, கால், முகம்ன்னு எல்லா இடங்களையும் வெட்டி சிதைச்சுருக்காங்க. இதுல சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த சுந்தர் உயிரிழந்துட்டாரு. அடுத்து ரெண்டு பேரும் முன்னீர் பள்ளம் காவல் நிலையத்துல சரணடைஞ்சுட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் மணிகண்டன், இசக்கி இருவரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
நகைக்காக 84 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

நகைக்காக 84 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
21 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved