Also Watch
Read this
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி இணைந்து வாக்கு சேகரித்தனர்.

எடப்பாடியில் தீவிர பிரச்சாரம்
எடப்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது;
முதல்வர் ஸ்டாலின், கூப்பனை வைத்து ஓட்டு கேட்கிறார். என் மீதும், EPS மீதும் தனி நபா் தாக்குதல் நடத்திய CM, இப்போது ரூ.8,000 கூப்பனை வைத்து ஓட்டு கேட்கிறாா். இபிஎஸ் ஆட்சியில் 3,000 பள்ளிகள் திறக்கப்பட்டது, திமுக ஆட்சியில் ஒரு பள்ளி, ஒரு கல்லூாிகள் கூட திறக்கப்படவில்லை.
30 ஆண்டு கால கனவான சேலம் - மேட்டூா் உபாிநீா் திட்டத்தை கொண்டுவந்தவா் எடப்பாடி பழனிசாமி.

இபிஎஸ் தான் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வா், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டுமெனில் இபிஎஸ் முதல்வராக வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.

வாக்குறுதியளித்த இபிஎஸ்
தேர்தல் பிரச்சாரத்தில், எடப்பாடி வேட்பாளர் இபிஎஸ் அளித்த வாக்குறுதிகள்;
* பனை ஏறும் விவசாயிகளுக்கு மரம் ஏறும் கருவிகள் இலவசமாக வழங்கப்படும்
* பனை மரம் ஏறும் போது விழுந்து பலியாகும் விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்
* ஏழை நெசவாளா்களுக்கு வீடு கட்டித்தரப்படும்

* நெசவாளா்களை காக்கும் வகையில் இலவச மின்சாரம் 450 யூனிட்டாக உயா்த்தப்படும்
* விசைத்தறிகளுக்கான 1000 யூனிட் இலவச மின்சாரம் 1,400 யூனிட்டாக உயா்த்தப்படும்
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.