Also Watch
Read this
By: Manigandan Raja

வாக்கை வேரு ஒருவர் பதிவு செய்துள்ளதாக தகவல் :
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது குறிப்பாக பொதுமக்கள் காலை முதலே தங்களது வாக்குகளை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரியை சேர்ந்த சூரிய பிரகாசம் நாராயணன் என்ற இளைஞர்ராம்சந் பகுதியை சேர்ந்தவர் இவர் இன்று தனது வாக்கினை செலுத்த கோத்தகிரிஅரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனது வாக்கினை பதிவு செய்ய வந்தார்.
வரிசையில் நின்று வாக்களிக்க செல்லும்போது அதிகாரிகள்வாக்காளர் அடையாள அட்டையை சோதனை செய்தனர்பின்னர் அந்த இளைஞரின் வாக்கினை வேறு யாரோ செலுத்தியதாக கூறி
அந்த இளைஞரை வெளியே அனுப்பினர் உள்ளனர் இதனால அதிர்ச்சி அடைந்த இளைஞர் அந்த பள்ளியில் நீண்ட நேரம் காத்திருந்தார்.
இளைஞர் மீண்டும் அதிகாரியிடம் கேட்கும் போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறியதாக ஆத்திரமடைந்த இளைஞர் அங்கிருந்து வெளியே வந்தார் சுமார் 2 மணி நேரம் தனது வாக்கினை செலுத்தாமல் இங்கேயே காத்திருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.