Also Watch
Read this
By: Web Team

ஆசிய வளர்ச்சி வங்கியின் முதலீட்டு திட்டம் தொடர்பாக, தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டு திட்டம் சார்ந்த நிர்வாக மேம்பாடு மற்றும் விழிப்பணர்வு ஆலோசகர் குழு சார்பில் திருநெல்வேலியில் கவுன்சிலர்களுக்கு புகைப்பட காட்சிகளுடன் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் சமூக பாதுகாப்பு, மாற்று குடியமர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பணி இடத்தில் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.
திட்டங்களை செயல்படுத்தும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை வைத்து கூட்டம் நடத்தாமல் எங்களை வைத்து நடத்துவதில் என்ன பயன் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.