news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடலில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல், கடத்தல் கும்பல் குறித்து விசாரணை
tv

Also Watch

tv

Read this

கடலில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல், கடத்தல் கும்பல் குறித்து விசாரணை

புதுக்கோட்டை

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kanja

புதுக்கோட்டை அருகே கடலில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆதிப்பட்டினம் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது, சுமார் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில், மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 47க்கும் மேற்பட்ட பொட்டலங்கள் கடலில் மிதந்து வருவதை கண்டனர்.

உடனே, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு குழுமத்தினர், கடலில் மிதந்த பொட்டலங்களை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்பு அதனை சோதனையிட்டதில் பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து திருச்சிக்கு கொண்டு சென்றனர். படகு மூலம் கஞ்சா கடத்த முயன்று, நடுக்கடலில் கஞ்சா பொட்டலங்களை விட்டுச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
6 hrs 53 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau