news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாம் தமிழர் கட்சி நிச்சயம் மாற்றத்தை தரும்
tv

Also Watch

tv

Read this

நாம் தமிழர் கட்சி நிச்சயம் மாற்றத்தை தரும்

புதுக்கோட்டை

70

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pdk 3

புதுக்கோட்டை என்றாலே முக்கியமாக கனிமவள கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேசினால் படுகொ*ல செய்யப்படும் அளவிற்கு கேடான போக்கும் இருக்கிறது. அதிமுக திமுக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை மக்கள் பேச பயப்படுகிறார்கள். இந்த பிரச்சனை எல்லாம் பிரதான பிரச்சனையாக எடுத்து நாம் தமிழர் கட்சி பேச உள்ளது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருப்பது நாம் தமிழர் கட்சி தான். இதை மக்கள் கவனித்துக் கொண்டு உள்ளனர். இது நாம் தமிழர் கட்சிக்கு நிச்சயம் மாற்றத்தை தரும் என புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி தெரிவித்தார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அதனை மூத்த தமிழ் தேசியர் துரை மதிவாணன் அலுவலகத்தினை திறந்து வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் பொன் வாசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது தமிழரசி நியூஸ் தமிழுக்கு பேட்டி அளித்தார்.

பேரம் பேச வேண்டிய அவசியமே எதுவும் இல்லை
அதில் மாற்றம் என்பது சொல் அல்ல செயல் என்பதற்கு ஏற்றவாறு தான் நாம் தமிழர் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேச வேண்டிய அவசியமோ, கூட்டணிக்கு போக வேண்டிய அவசியமே எதுவும் இல்லை. கொள்கை ரீதியாக நின்று தேர்தல் நகர்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம் என கூறினார். முதல் முதலாக வேட்பாளர் அறிவித்து பணிகளை தொடங்கி உள்ளோம் என கூறிய அவர் முதல் கட்டமாக தேர்தல் பணிமனை மற்றும் அலுவலகம் திறந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

சரியான மாற்றமாக இருக்கும்
தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதால் திருமயம், ஆலங்குடி பகுதிகள் பரீட்சமாக உள்ளது. புதுக்கோட்டை மக்களின் பிரதான பிரச்சனைகள் என்ன, என்பது நாடாளுமன்றத் தேர்தலில் அறிந்துள்ளேன். அதனால் மக்களை அணுகுவதில் எளிதாக உள்ளதாக கூறினார். மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர் என்றும் அந்த மாற்றமும் சரியான மாற்றமாக இருக்கும், இப்போது மாற்றம் என சொல்லி பலர் வந்துள்ளனர். ஆனால் அந்த மாற்றமும் கொள்கை ரீதியாகவும், அரசியல் நகர்வு ரீதியாகவும் மக்களின் நலன்கள் ரீதியாகவும் ஒரு சரியான மாற்றமாக இருக்க வேண்டும் என்பதால்தான் நாம் தமிழர் கட்சியை மக்கள் தேர்வு செய்கிறார்கள் என தெரிவித்தார்.

மதுபான கடையே பிரதான பிரச்சனை
பெண்களை சந்திக்கும்போது மதுபான கடை பிரச்சனையை பிரதான பிரச்சனையாக எடுத்துக் கூறுகிறார்கள். மதுபான கடை அருகில் உள்ள வீடுகளை மாற்ற வேண்டிய சூழ்நிலையில் பெண்கள் உள்ளனர். அந்த அளவிற்கு மதுபான கடைகளில் தொல்லைகள் அதிகரித்து உள்ளது. புதுக்கோட்டை தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. தண்ணி தொட்டிகள் கட்டி இருந்தாலும் அது பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. அதேபோன்று வீட்டுமனை பட்டா, சாலை பிரச்சனை போன்ற பிரச்சனைகளும் உள்ளது. புதுக்கோட்டை தொகுதியில் வானம் பார்த்த பூமி என்பதால், புதுக்கோட்டை சுற்றியுள்ள குளங்கள் சரியான முறையில் தூர்வாரப்படவில்லை, நீர் ஆதாரத்திற்கான எந்த தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. நீர் வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.

தைல மரங்களால் பாதிப்பு
பல ஏக்கர் கணக்கில் தைலம் மரங்கள் அதிகமாக நடப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது, நீர் வழித்தடங்கள் தடுக்கப்பட்டுள்ளதால், பல்லுயிர் பெருக்கம் உள்ள புதுக்கோட்டையில் அழிந்து வருகிறது. உயிரினங்கள் அழிந்தால் அந்த அழிவு நாளைக்கு மனிதர்களுக்கும் ஏற்படும். அந்த வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

அதிகரித்துள்ள கனிமவளக் கொள்ளை
ஆவணி கோட்டை பகுதிகளில் பிரதான தொழிலாக உள்ள முந்திரி விற்பனையில் இடைத்தரகர்கள் இல்லாமல் சேமிப்பு கிடங்கு அமைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய செய்யலாம். புதுக்கோட்டை என்று பேசினால் இங்கு முக்கியமாக கனிமவள கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேசினால் படுகொ*ல செய்யப்படும் அளவிற்கு கேடான போக்கு இருக்கிறது. அதிமுக திமுக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை மக்கள் பேச பயப்படுகிறார்கள். இந்த பிரச்சனை எல்லாம் பிரதான பிரச்சனை எடுத்து நாம் தமிழர் கட்சி பேச உள்ளது. இதெல்லாம் பிரதான பிரச்சனையாக உள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு நிச்சயம் மாற்றத்தை தரும்
மக்கள் குறித்தான பிரச்சனைகளை அவர்கள் மத்தியில் அரசியல் புரிதலோடு விளக்கினால் மாற்றத்திற்கான ஒரு கட்டத்திற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருப்பது நாம் தமிழர் கட்சி தான். தமிழ்நாடு முழுவதும் மக்கள் நலச் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து தீர்வையும் கொண்டு வந்துள்ளோம். மக்களுக்கு கேடு தரக்கூடிய திட்டங்களை நாம் தமிழர் கட்சி தடுத்தும் நிறுத்தி உள்ளது. இதை மக்கள் கவனித்துக் கொண்டு
உள்ளனர். இதெல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நிச்சயம் மாற்றத்தை தரும் என்று கூறினார்.

Related Link
அடிச்சாலும், புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா...

அடிச்சாலும், புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
6 hrs 11 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved