news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உதயசூரியனுக்கு ஓட்டு கேட்க கருப்பசாமி வந்துட்டான்...
tv

Also Watch

tv

Read this

உதயசூரியனுக்கு ஓட்டு கேட்க கருப்பசாமி வந்துட்டான்...

ராமநாதபுரம்

23

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rmp dmk 1

ராமநாதபுரம் அருகே தமிழக அரசின் திட்டங்களை கருப்பசாமி வேடமணிந்து நூதனமான முறையில் பொதுமக்களிடம் எடுத்துக் கூறிய திமுக நிர்வாகி ஒருவர் வீடு வீடாகச் சென்று மேளதாளத்துடன் ஆடிப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் திமுகவினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

துணை நடிகர் முனி போட்ட வேடம்
திருப்புல்லாணி அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நடிகரும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான ராஜேந்திரன் என்பவர் முனி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர் திமுக-வின் கலை இலக்கிய அணி மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்

திமுகவுக்கு ஆதரவாக வேடமணிந்து விழிப்புணர்வு
இந்த நிலையில் அவ்வப்போது இவர் மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக ஆளுநருக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் பல்வேறு வேடம் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் இன்று திருப்புல்லாணி அருகே உள்ள தாதனேந்தல் கிராமத்திற்கு சென்று அங்கு கருப்பசாமி வேடமணிந்து தமிழக அரசின் பல்வேறு முக்கிய திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

திமுக திட்டங்கள் குறித்து குறி சொல்லி விழிப்புணர்வு
குறிப்பாக திமுக திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மேளதாளத்தோடு திமுக பெண் நிர்வாகிகள் ஏராளமானோரோடு விளம்பரப் பதாகையை கையில் ஏந்தியவாறு ஆடிப்பாடி சென்று தமிழக அரசின் உடைய முக்கிய திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, நலிந்தோருக்கு உதவித்தொகை, மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதி, மகளிர் விடியல் பயணம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கூறி இந்த திட்டங்களை பெற்றவர்களை வரவழைத்து அவர்களிடம் கருப்பசாமி குறி கேட்பது போல் நூதனமான முறையில் எடுத்துக் கூறினார் இந்தச் சம்பவம் அந்தப் பகுதி கிராம மக்கள் மற்றும் திமுகவினரிடையே பெரும் வரவேற்பை பெரும் விதமாக அமைந்திருந்தது.

Related Link
நாம் தமிழர் கட்சி நிச்சயம் மாற்றத்தை தரும்

நாம் தமிழர் கட்சி நிச்சயம் மாற்றத்தை தரும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 20 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved