Also Watch
Read this
By: Web Team

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற கிடா முட்டு போட்டியில், 75க்கும் அதிகமான ஜோடி கிடாக்கள் பங்கேற்று நேருக்கு நேர் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டி கிராமத்தில், கிடாமுட்டு போட்டி நடத்த கிராம கமிட்டி சார்பில் முடிவெடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் கிடா முட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.,

இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 75க்கும் அதிகமான ஜோடி கிடாக்கள் பங்கேற்றன. இதில் கருமறை, செவலை மறை, குரும்பை, வெள்ளை கொங்கு, குட்டை கருமறை, வெள்ளை குரும்பை உள்ளிட்ட பல்வேறு வகையான கிடாக்கள், வயது மற்றும் பல் அடிப்படையில் நேருக்கு நேர் மோத விடப்பட்டன.

அதிகப்படியாக மோதிக் கொள்ளும் கிடாக்களுக்கு சிறப்பு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து கிடாக்களுக்கும் அண்டா, சேர் உள்ளிட்ட பரிசுகளை கிராம மக்கள் வழங்கினர்.
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கிடா முட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.