Also Watch
Read this
By: Web Team

அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமான பொருட்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கடந்த ஆண்டிற்கான விலை நிர்ணய தொகையின் அடிப்படையிலேயே ஏல ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும், கட்டுமான பொருட்களின் விலை நூறு சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனை கேட்டறிந்த நீதிபதி இவ்வாறு இருந்தால் எப்படி விலைநிர்ணயம் செய்து ஒப்பந்த புள்ளி பெற முடியும் என கேள்வி எழுப்பி பட்டியலை வெளியிட உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள் : மனு அளித்த சில மணி நேரங்களிலேயே பணி நியமன ஆணை..