news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பயணிகளை குளறுபடி செய்த ஒலிபெருக்கான்அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

பயணிகளை குளறுபடி செய்த ஒலிபெருக்கான்அறிவிப்பு

நெல்லை,அம்பாசமுத்திரம்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒலிபெருக்கான்அறிவிப்பு

நெல்லை - செங்கோட்டை இடையே சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வழியாக தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை 3.20
மணி அளவில் அம்பாசமுத்திரம் ரெயில் நிலையம் செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் பயணிகள் வருகை தர இருந்தது.

இந்த ரெயில் ஏற நின்ற பயணிகளை சிறிது நேரத்தில் ஒலி பெருக்கான் குளறுபடி செய்தது. அதாவது முதலில் பிளாட்பாரம் நம்பர் 1 -ல் ரெயில் வரும் என்று சொல்லி டிக்கெட் கொடுத்துகிட்டு இருந்த வேலையில் நடைமேடை 2 பிளாட்பாரத்தில் வரும் என்று ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது வயதானவர்களும் குழந்தையை வைத்துக் கொண்டிருப்பவர்களும் விறுவிறுப்பாக தண்டவாளத்தை கடந்தும் நடை பாலத்தின் வழியாகவும் பிளாட்பாரத்திற்கு சென்றனர். பின்பு அடுத்த நொடியே முதலாவது பிளாட்பாரத்திற்கு வரும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஒலிப்பெருக்கான் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வண்டி வந்து விடுமோ என்று அவசரமாக குழந்தைகளோடு பிளாட்பாரத்தை கடந்தும் முதியவர்கள் படிகளை ஏற முடியாமல் ஏறியும் முதலாவது
பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த பயணிகள் இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் முறையிட்டனர். அப்போது அவர் பணிகள் நடைபெறுவதால் ரெயில் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது இதனால் இந்த குளறுபடி நிகழ்ந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Link
இரவு பகலாக நடைபெறும் ஐஸ் கட்டி தயாரிப்பு பணி

இரவு பகலாக நடைபெறும் ஐஸ் கட்டி தயாரிப்பு பணி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 43 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau