Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் குடவாசல் மேலப்பாளையூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 நாட்கள் ஆன கோடை குறுவை நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது.
மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில் ஆறுகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது மேலும் மும்முனை மின்சாரம் முறையாக கிடைக்காத காரணத்தினால் பம்பு செட்டுகள் மூலமாகவும் தண்ணீர் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது இதனால் ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் மேல் செலவு செய்த நிலையில் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதால் விவசாயிகள்
மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
உடனடியாக தமிழக அரசு பாசனத்திற்காக குறைந்த அளவாவது தண்ணீரை திறந்து விட வேண்டும் இல்லை என்றால் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.