news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொள்ளாச்சி அருகே மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா
tv

Also Watch

tv

Read this

பொள்ளாச்சி அருகே மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பொள்ளாச்சி, கோவை

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE

மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா :

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு
விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.

இதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜமீன் ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள்
கொடுமுடி ,பழனி, நல்லூற்று, கூடுதுறை மற்றும் சேத்துமடை தெய்வ குளம் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற 5 திருத்தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர் விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் 60 அடி நீளம் உள்ள தீ குண்டத்தில் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த குண்டம் திருவிழாவில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Link
போட்டிப்போட்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்த மக்கள்

போட்டிப்போட்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்த மக்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 33 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved