Also Watch
Read this
By: Manigandan Raja

கடல் வழி ரோந்து :
காரைக்கால் மாவட்ட கடலோர காவல் நிலைய போலீசார் இன்று வங்க கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் கடலோர காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் கடலோர காவல்
நிலையத்திற்கு சொந்தமான படகில் ஆழ்கடலில் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ரோந்து பணியின் போது தடைக்காலம் முன்னிட்டு விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தமிழக பகுதி சேர்ந்த விசைப்படகு ஒன்று காரைக்கால் பகுதியில் சென்றதை கண்ட காவல் ஆய்வாளர் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் அவர்கள் டீசல் வாங்குவதற்கு வந்ததாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர்களை திருப்பி அனுப்பிய போலீசார் கடல் வழியாக மதுபானங்கள், போதை பொருட்கள்
கடத்தல் உள்ளிட்டவை தடுக்க கடல் வழி ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved