Also Watch
Read this
By: Manigandan Raja

திலக் வர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் பெயர்கள் பரிசீலனை..?
இந்திய T20 அணியின் புதிய கேப்டன்கள் தேர்வு பட்டியலில் திலக் வர்மா, இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மும்பையில் நடைபெறவுள்ள தேர்வாளர்கள் கூட்டத்தில், இந்தத் தலைமை மாற்றத்திற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான கொள்கை :

வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கொள்கையை வகுப்பது தொடர்பாக பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லீக் ஒன்றில் விளையாடி முடித்த பிறகு, மீண்டும் இந்திய கிரிக்கெட் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, குறைந்தது ஐந்து ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கொள்கையை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
இந்திய ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல் :

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன்- எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் மலேசியாவின் ஆரோன் தாய்- காங் காய் ஜிங் ஜோடியை எதிர்கொண்ட இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன்- எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி 21க்கு 15, 21க்கு 19 என்ற செட் கணக்கில் வென்றது.
ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி விலகல் :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி :
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 41புள்ளி 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved