Also Watch
Read this
By: Manigandan Raja

அணு ஆயுதங்களுக்காக ஆலையை திறந்த வடகொரியா :
அணு ஆயுதங்களுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய ஆலையை வடகொரியா திறந்து உள்ளது. அணு ஆயுத திட்டத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வரும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, வடகொரியாவின் ஆயுதத் தர அணுப் பொருட்கள் உற்பத்தித் திறன் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதன்படி புதியதாக திறக்கப்பட்ட ஆலையை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
இந்தோனேசியா zoo-வில் சுமத்திரா புலிக்குட்டிகள் :

இந்தோனேசியாவின் மிருகக்காட்சிசாலை ஒன்றில், அழிவின் விளிம்பில் உள்ள நான்கு சுமாத்திரா புலிக்குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இது அந்நாட்டின் அழிந்துவரும் உயிரினங்கள் பாதுகாப்புத் திட்டத்தில் கிடைத்த மற்றுமொரு வெற்றிய என கூறப்படுகிறது. ப்ரிகன் (( Prigen)) சஃபாரி பூங்காவில் பிறந்த இந்த நான்கு குட்டிகளின் மூலம், அப்பூங்காவின் சுமாத்திரா புலிகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது
நின்றிருந்த விமானத்தின் முன் டயர் பகுதி உடைந்து விபத்து :

ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, லுஃப்தான்சா போயிங் 787-9 டிரீம்லைனர் விமானத்தின் முன்பகுதி சக்கரம் உடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொழில்நுட்ப விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
போர் நிறுத்தத் திட்டத்தை ஹிஸ்புல்லா போராளிக் குழு நிராகரிப்பு :
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் ஒப்புக்கொண்ட போர் நிறுத்தத் திட்டத்தை ஹிஸ்புல்லா போராளிக் குழு நிராகரித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தெற்கு லெபனானில் தாக்குதல்களைத் தொடர்ந்ததுடன், தெற்கிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டதாக தெரிவித்துள்ளது.
எபோலா சடலங்களை அடக்கம் செய்யும் குழு மீது தாக்குதல் :
காங்கோவின் தெற்கு கிவு நகரில் வசிப்பவர்கள், எபோலா சடலங்களை அடக்கம் செய்யும் குழுவினரைத் தாக்கியதால், மீட்புக் குழுவினர் ஒரு சவப்பெட்டியைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நோய்ப் பரவல் ஏற்படக்கூடும் அபாயம் எழுந்துள்ளது.
AFC/M23 கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்டானா நகரில், இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.