news-tamil-logo

3/19/2026, 1:20:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மினி மாரத்தான் போட்டி
tv

Also Watch

tv

Read this

மினி மாரத்தான் போட்டி

ராமநாதபுரம்

Posted on: Feb 15, 2026 07:06 AM

28

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rmp main

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே தமிழக முதலமைச்சரின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

மினி மாரத்தான் போட்டி உற்சாகம்
கீழச்சாக்குளம் கிராம திமுக கிளைக்கழகம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மாரத்தானில் பெண்களும், 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மாரத்தான் போட்டியில் ஆண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி
கீழச்சாக்குளம் கிராமத்தில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்ப்பட்ட இந்த மினி மாரத்தானை திமுக கடலாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்ற மாரத்தான் என்ற பந்தய வீரர் பின்னோக்கி ஓடியபடி போட்டியில் கலந்து கொண்டார்.


முதல் பரிசை தட்டிச்சென்ற கப் டாமு நிகிஷா
ஆண்கள் பிரிவில் முதல் பரிசான 10,073 ரூபாயை பெங்களூருவை சேர்ந்த கப் டாமு நிகிஷா தட்டிச்சென்றார். இரண்டாம் பரிசை 7,073 ரூபாயை கேரளாவைச் சேர்ந்த பிரணவும், மூன்றாம் பரிசுத் தொகையான 5,073 ரூபாயை திருச்சி ஹேமராஜ் ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையுடன் சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் வழங்க பட்டது.

பெண்கள் பிரிவில் முதல்பரிசை வென்ற ஜென்சி
பெண்கள் பிரிவில் முதல் பரிசு வென்ற கேரளாவை சேர்ந்த ஜென்சிக்கு 10,073 ரூபாயும், இரண்டாம் பரிசு வென்ற ஈரோட்டை சேர்ந்த ஹேமதிக்க்கு 7,073 ரூபாயும் , மூன்றாம் பரிசு வென்ற புதுக்கோட்டை சந்தியாவிற்கு 5,073 ரூபாயுடன் சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.முதல் 3 பரிசுகளை தவிர அடுத்து வந்த 20 பேருக்கு தலா 1,000 ரூபாய் ரொக்க பரிசும் சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Related Link

"சதிகளை முறியடித்து சரித்திர வெற்றி.." முதல்வர் அனல் பறக்க பேச்சு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 32 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved