Also Watch
Read this
By: Fyrose Banu

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் வந்தவாசி மற்றும் தெள்ளார் பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்த எம்.எல்.ஏ
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் கலந்துகொண்டு கர்ப்பிணிகளை வரிசையாக அமர வைத்து மாலை அணிவித்து சீர்வரிசையான புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

பின்னர் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved