Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து ஒரு வயது பெண் குழந்தை மற்றும் காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரிக்கலாம்பாடியை சேர்ந்த விக்னேஷ் - உமாதேவி தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை மேகனாவி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த தாய் உமாதேவி, கிணற்றில் குதித்து குழந்தையை காப்பாற்ற முயற்சித்ததாக தெரிகிறது.
இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இரண்டு பேரின் சடலத்தையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.