news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வேதனை இல்லை, மகிழ்ச்சியே, விளக்கம் கேட்டிருக்கலாம் - செங்கோட்டையன்
tv

Also Watch

tv

Read this

வேதனை இல்லை, மகிழ்ச்சியே, விளக்கம் கேட்டிருக்கலாம் - செங்கோட்டையன்

ஈரோடு

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kas

அதிமுக பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக செங்கோட்டையன் கூறி உள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் கூறியதாவது:

அதிமுக மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், தொண்டர்களின் உணர்வு, மக்களின் எதிர்ப்பார்பை பிரதிபலிக்கின்ற வகையில், எனது விளக்கத்தை வெளிப்படையாக தெரிவித்தேன். இதற்கு, கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளேன். பொதுவாக, ஜனநாயகம் என்பது, விளக்கம் கேட்டிருக்கவேண்டும்.

விளக்கம் கேட்காமல், ஜனநாயகத்தை காக்கிறோம் என கூறியிருக்கிறார்கள். சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் கருத்துகளை சொல்வதற்கு எங்கள் கட்சியில் தடையில்லை என்று மேடைகளில் பேசியிருக்கிறார்கள்.

நான் எடுத்துக்கூறிய கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை தொடரும். 6 பேர் தன்னை சந்திக்கவில்லை, பச்சைப்பொய் என்று இபிஎஸ் கூறியதற்கு நான் விளக்கம் அளித்துவிட்டேன். நாங்கள் சந்தித்தது, கருத்துக்களை பரிமாறிக் கொண்டது, பொதுச் செயலாளர் இடத்திலே தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஏறத்தாழ 8 மாதங்களுக்கு முன்னால் இதை தெளிவுபடுத்தி உள்ளேன்.

கட்சி பொறுப்புகளில் இருந்து நான் நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்பதை இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை.

பொதுக்குழு கூட்டினால் மட்டும் தான் பேச முடியும். 10 நாட்களுக்குள் இந்த பணியை ஒருங்கிணைப்பதை துவங்க வேண்டும். ஒரு மாதம் ஆனாலும் பேசி தீர்க்க வேண்டும் என்று தான் கூறி இருந்தேன்.

கெடு விதித்ததை கண்டித்த செம்மலை, தர்மயுத்தத்திற்கு போய்விட்டு வந்தவர். அதனால் அவர் அப்படி சொல்லி இருக்கலாம். யார் தான் இந்த கருத்தை வெளிப்படுத்துவது?

தொண்டர்கள் அனைவரும் நினைக்கிறார்கள், இந்த இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று, மக்களும் நினைக்கிறார்கள். அவர்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

காலில் விழுந்து கூட ’சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று காஞ்சிபுரத்திலே பேசி இருக்கிறார்கள். அதற்கு மேலே எந்த நடவடிக்கையும் இல்லை என்கிற போது, ஒரு விளக்கத்தை என் போன்றவர்கள் கட்சியின் நலன் கருதி வெளியிட்டோம்.

என்னை நீக்கியது கட்சிக்கு பாதிப்பா? என்பது போக போக தெரியும்,


டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, பிரேமலதா உள்ளிட்டோர் எனது கருத்து நியாயமான கருத்து என்று சொல்லி இருக்கிறார்கள். கட்சியின் நலன் கருதி தான் சொல்லி இருக்கிறார்கள், எனது நலன் கருதி அல்ல.

காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்லும், கொஞ்சம் பொறுத்து இருங்கள்.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதையும் கேளுங்கள்; "என்னுடைய பணி தொடரும்..! "SENGOTTAIYAN அதிரடி பிரஸ்மீட்| Sengottaiyan | AIADMK | TNPolitics

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
59 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved